Thursday, 27 December 2012

பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளா

1பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளாஎத்தான்மற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாய்இனிஅல்லேனென லாமே.


7.001.1பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும்திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாதுவைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!



2நாயேன்பல நாளும்நினைப்பின்றிமனத் துன்னைப்பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன்வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆயாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.2மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும்மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!


3 மன்னேமற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னைப்பொன்னேமணி தானேவயிரம்மேபொரு துந்திமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அன்னேஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.3தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன்அல்லேன்' என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.


4முடியேன்இனிப் பிறவேன்பெறின்மூவேன்பெற்றம் ஊர்தீகொடியேன்பல பொய்யேஉரைப்பேனைக்குறிக் கொள்நீசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அடிகேள்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.4இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தௌவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.


5 பாதம்பணி வார்கள்பெறுபண்டம்மது பணியாயாதன்பொரு ளானேன்அறிவில்லேன்அரு ளாளாதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆதீஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.5அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது,'அடியவன் அல்லேன்' எனஎதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், 'ஆதன்' என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.


6தண்ணார்மதி சூடீதழல்போலுந்திரு மேனீஎண்ணார்புர மூன்றும்எரியுண்ணநகை செய்தாயமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அண்ணாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.6தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!


7 ஊனாய்உயி ரானாய்உடலானாய்உல கானாய்வானாய்நில னானாய்கடலானாய்மலை யானாய்தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆனாய்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.7பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன்அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!


8 ஏற்றார்புரம் மூன்றும்மெரியுண்ணச்சிலை தொட்டாய்தேற்றாதன சொல்லித்திரிவேனோசெக்கர் வான்நீர்ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆற்றாய்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.8பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!


9 மழுவாள்வலன் ஏந்தீமறையோதீமங்கை பங்காதொழுவாரவர் துயராயினதீர்த்தல்லுன தொழிலேசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அழகாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.9மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பொண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!


10 காரூர்புன லெய்திக்கரைகல்லித்திரைக் கையால்பாரூர்புக ழெய்தித்திகழ்பன்மாமணி யுந்திச்சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆரூரன்எம் பெருமாற்காள்அல்லேன்என லாமே.

7.001.10மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று,ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் 'அடியவனல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!திருச்சிற்றம்பலம்‹‹ முன்புறம்|தொடர்ச்சி ››தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:திருவெண்ணெய்நல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூரருட்,டுறையுள், தென்பால், பொருந்துமோ, தென்பால்வெண்ணெய்,உனக்கு, அல்லேன், பேசியது, அல்லேன்என, அருட்டுறைத், பெண்ணையாற்றின், அடியவன், காளாய்இனி, முன்பே, இப்பொழுது, எதிர்வழக்குப், கண்ணதாகிய, அடியவனாகி, திருக்கோயிலின்கண்,எழுந்தருளியிருக்கும், திருவெண்ணெய்நல்லூரின், தலைவனே, நிறைந்த, உடையவனே, பூக்களின், எழுந்தருளியுள்ள, வருகின்ற, வழக்குப், மூன்றையும், திருக்கோயிலில், திருவெண்ணெய்நல்லூரில், உண்ணும்படி, ஆயினும், அரண்கள், சூடியவனே, திருவெண்ணெய்நல்லூர், மறவாமலே,அதனால், என்னும், கின்றேன்மனத்,திருச்சிற்றம்பலம், வாதேநினைக், பெற்றேன், துன்னைப், திருமுறை, போலும்

No comments:

Post a Comment