Saturday, 15 March 2014

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர்

அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்

மரம்: மூங்கில்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: பித்தாபிறை -7 -1 சுந்தரர்

முகவரி: திருவெண்ணெய்நல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04153 234548

இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர்: தடுத்தாட்கொண்டநாதர், இறைவி: வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம்: பெண்ணையாறு.

கல்வெட்டு:

( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.)

திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராச உடையார், கோப்பரகேசரி பன்மரான உடையார் இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்கஉடையார், இரண்டாம் இராசாதிராசஉடையார், மூன்றாங் குலோத்துங்கஉடையார், மூன்றாம் இராசராசன் உடையார், மூன்றாம் இராசேந்திரஉடையார் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராயஉடையார், குமாரமல்லி கார்ச்சுனராயஉடையார், கிருஷ்ணதேவராய உடையார் இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், முதலாம் இராசராச உடையார் கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

குறிக்கப்படும் திருமேனிகளுள் சில: திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி உடையார் இராஜராஜ தேவரின் கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கஉடையார் கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் `தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: `பூமருவிய திசைமுகத் தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழ உடையார் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை உறுதிப் படுத்துகின்றது `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற கல்வெட்டுத் தொடர். (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி)

அக்கல்வெட்டு பின்வருமாறு: `ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான் உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)

குறிப்பு: இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார் காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268 மார்ச்சு 28 ஆம் தேதியாகும். 

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில நிவந்தம்.
நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார், திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில் களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக் கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர் கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார் அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும், திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திருவெண்ணெய் நல்லூரில் வானவன்வதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம் ஒன்றே அரைமா அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள். (மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்.)

திருவருட்டுறை உடைய மகாதேவர்க்கு அளிக்கப்பட்ட நிவந்தம்: அருட்டுறை உடைய மகாதேவர் கோயில்  அகமுடையார்மகன் திருமலை அழகியானான வீரகள், வீரப் பல்லவரைய உடையான் அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி, தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன் தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது தன்னுடைய இந்தநிலத்தை உடையார் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி, கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும், திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில் ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக் கொடுத்துள்ளான்.

பொதுச் செய்திகள்: இவ்வூரில் இராஜராஜப்பேரேரி ஒன்று உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரசோழதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும்.

ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல் விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால் பழுதுபார்க்கப்பட்டது, 

விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவரா உடையார் தம்பேரால் தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள் திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராய உடையார் சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார்.

இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின் மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால் கட்டப் பட்டதாகும். இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின் புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். இக் கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், 
[சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்.]

இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது.

அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான்.

பட்டுடையான்: `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன் திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட ``ஆட்கொண்டதேவர்  சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களைத் தவிர``, என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப் பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது.

``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார் இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

Thursday, 27 December 2012

பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளா

1பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளாஎத்தான்மற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாய்இனிஅல்லேனென லாமே.

7.001.1பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும்திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாதுவைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

2நாயேன்பல நாளும்நினைப்பின்றிமனத் துன்னைப்பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன்வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆயாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.2மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும்மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

3 மன்னேமற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னைப்பொன்னேமணி தானேவயிரம்மேபொரு துந்திமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அன்னேஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.3தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன்அல்லேன்' என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

4முடியேன்இனிப் பிறவேன்பெறின்மூவேன்பெற்றம் ஊர்தீகொடியேன்பல பொய்யேஉரைப்பேனைக்குறிக் கொள்நீசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அடிகேள்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.4இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தௌவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

5 பாதம்பணி வார்கள்பெறுபண்டம்மது பணியாயாதன்பொரு ளானேன்அறிவில்லேன்அரு ளாளாதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆதீஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.5அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது,'அடியவன் அல்லேன்' எனஎதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், 'ஆதன்' என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

6தண்ணார்மதி சூடீதழல்போலுந்திரு மேனீஎண்ணார்புர மூன்றும்எரியுண்ணநகை செய்தாயமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அண்ணாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.6தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

7 ஊனாய்உயி ரானாய்உடலானாய்உல கானாய்வானாய்நில னானாய்கடலானாய்மலை யானாய்தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆனாய்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.7பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன்அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

8 ஏற்றார்புரம் மூன்றும்மெரியுண்ணச்சிலை தொட்டாய்தேற்றாதன சொல்லித்திரிவேனோசெக்கர் வான்நீர்ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆற்றாய்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.8பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

9 மழுவாள்வலன் ஏந்தீமறையோதீமங்கை பங்காதொழுவாரவர் துயராயினதீர்த்தல்லுன தொழிலேசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அழகாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.9மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பொண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

10 காரூர்புன லெய்திக்கரைகல்லித்திரைக் கையால்பாரூர்புக ழெய்தித்திகழ்பன்மாமணி யுந்திச்சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆரூரன்எம் பெருமாற்காள்அல்லேன்என லாமே.

7.001.10மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று,ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் 'அடியவனல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!திருச்சிற்றம்பலம்‹‹ முன்புறம்|தொடர்ச்சி ››தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:திருவெண்ணெய்நல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூரருட்,டுறையுள், தென்பால், பொருந்துமோ, தென்பால்வெண்ணெய்,உனக்கு, அல்லேன், பேசியது, அல்லேன்என, அருட்டுறைத், பெண்ணையாற்றின், அடியவன், காளாய்இனி, முன்பே, இப்பொழுது, எதிர்வழக்குப், கண்ணதாகிய, அடியவனாகி, திருக்கோயிலின்கண்,எழுந்தருளியிருக்கும், திருவெண்ணெய்நல்லூரின், தலைவனே, நிறைந்த, உடையவனே, பூக்களின், எழுந்தருளியுள்ள, வருகின்ற, வழக்குப், மூன்றையும், திருக்கோயிலில், திருவெண்ணெய்நல்லூரில், உண்ணும்படி, ஆயினும், அரண்கள், சூடியவனே, திருவெண்ணெய்நல்லூர், மறவாமலே,அதனால், என்னும், கின்றேன்மனத்,திருச்சிற்றம்பலம், வாதேநினைக், பெற்றேன், துன்னைப், திருமுறை, போலும்

Saturday, 20 October 2012

அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை கிருபாபுரீஸ்வரர் ஆலயத்தின் புகழைப்பற்றி சுந்தரர் பெருமான் அருளிய பதிகம்!!!

7.001.திருவெண்ணெய்நல்லூர்

பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் -தடுத்தாட்கொண்டவீசுவரர்.தேவியார் -வேற்கண்மங்கையம்மை.

1பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளாஎத்தான்மற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாய்இனிஅல்லேனென லாமே.

7.001.1பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும்திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாதுவைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

2நாயேன்பல நாளும்நினைப்பின்றிமனத் துன்னைப்பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன்வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆயாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.2மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும்மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

3 மன்னேமற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னைப்பொன்னேமணி தானேவயிரம்மேபொரு துந்திமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அன்னேஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.3தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன்அல்லேன்' என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

4முடியேன்இனிப் பிறவேன்பெறின்மூவேன்பெற்றம் ஊர்தீகொடியேன்பல பொய்யேஉரைப்பேனைக்குறிக் கொள்நீசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அடிகேள்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.4இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தௌவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

5 பாதம்பணி வார்கள்பெறுபண்டம்மது பணியாயாதன்பொரு ளானேன்அறிவில்லேன்அரு ளாளாதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆதீஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.5அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது,'அடியவன் அல்லேன்' எனஎதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், 'ஆதன்' என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

6தண்ணார்மதி சூடீதழல்போலுந்திரு மேனீஎண்ணார்புர மூன்றும்எரியுண்ணநகை செய்தாயமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அண்ணாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.6தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

7 ஊனாய்உயி ரானாய்உடலானாய்உல கானாய்வானாய்நில னானாய்கடலானாய்மலை யானாய்தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆனாய்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.7பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன்அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

8 ஏற்றார்புரம் மூன்றும்மெரியுண்ணச்சிலை தொட்டாய்தேற்றாதன சொல்லித்திரிவேனோசெக்கர் வான்நீர்ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆற்றாய்உனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.8பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

9 மழுவாள்வலன் ஏந்தீமறையோதீமங்கை பங்காதொழுவாரவர் துயராயினதீர்த்தல்லுன தொழிலேசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்அழகாஉனக் காளாய்இனிஅல்லேன்என லாமே.

7.001.9மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பொண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

10 காரூர்புன லெய்திக்கரைகல்லித்திரைக் கையால்பாரூர்புக ழெய்தித்திகழ்பன்மாமணி யுந்திச்சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்ஆரூரன்எம் பெருமாற்காள்அல்லேன்என லாமே.

7.001.10மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று,ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் 'அடியவனல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!திருச்சிற்றம்பலம்‹‹ முன்புறம்|தொடர்ச்சி ››தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:திருவெண்ணெய்நல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூரருட்,டுறையுள், தென்பால், பொருந்துமோ, தென்பால்வெண்ணெய்,உனக்கு, அல்லேன், பேசியது, அல்லேன்என, அருட்டுறைத், பெண்ணையாற்றின், அடியவன், காளாய்இனி, முன்பே, இப்பொழுது, எதிர்வழக்குப், கண்ணதாகிய, அடியவனாகி, திருக்கோயிலின்கண்,எழுந்தருளியிருக்கும், திருவெண்ணெய்நல்லூரின், தலைவனே, நிறைந்த, உடையவனே, பூக்களின், எழுந்தருளியுள்ள, வருகின்ற, வழக்குப், மூன்றையும், திருக்கோயிலில், திருவெண்ணெய்நல்லூரில், உண்ணும்படி, ஆயினும், அரண்கள், சூடியவனே, திருவெண்ணெய்நல்லூர், மறவாமலே,அதனால், என்னும், கின்றேன்மனத்,திருச்சிற்றம்பலம், வாதேநினைக், பெற்றேன், துன்னைப், திருமுறை, போலும

Tuesday, 16 October 2012

சிவாலயம்! அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் ஆலயம்,திருவெண்ணெய்நல்லூர்!!!

இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்" உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச்சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது.அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.
ஆலயத்தின் சிற்பு;

தேவாரம் பாடிய சுந்தரர் வரலாறும் திருவெண்ணெய்நல்லூர் ஈசனால் தடுத்தாட்கொள்ளலும்!!!

சுந்தரர் வரலாறு
திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகியஅணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு உமையம்மையாரின் சேடியர்களில் அநிந்திதை கமலினிஎன்ற மதிமுக நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டு காதல் கொண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர்தம் அழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து `நீ மாதர்மேல் மனம்வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் காதல் இன்பத்தில்கலந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக` என்று பணித்தார். சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து `எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்துமயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருள வேண்டும்` என வேண்டிக்கொண்டார். பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.பிறப்பும் வளர்ப்பும்:ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்தமிழ் நாட்டில் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருவவதாரம் செய்தருளினார். சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர்.நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் அக் குழந்தையின் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார்.அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார்.சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணி னார். திருநாவலூரை அடுத்த புத்தூரில்சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். சடங்கவி சிவாசாரியாரும் பெரி யோரை வரவேற்றுபசரித்தார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார். முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடைய னாருக்குத் தெரிவித்தனர்.அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரசபதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டியஎல்லாவற்றையும் குறைவறச் செய்தார்.தடுத்தாட்கொள்ளப்பெறுதல்:திருநாவலூரில் திருமணத்திற்கு முதல்நாள் காப்பணிதல் நடைபெற்றது. மறுநாள் வைகறைப்பொழுதில் நம்பியாரூரர் துயி லெழுந்து நாட்கடன் முடித்துத் திருமஞ்சனம் ஆடினார். மன்னவர் திருவும், தங்கள் வைதிகத்திருவும் பொலிய மணக் கோலம் கொண் டார். சிவபெருமானுடைய திருவடிகளை எண்ணித் திருவெண்ணீ றணிந்து மங்கல வாத்தியங்கள் முழங்கக் குதிரைமீதமர்ந்து சுற்றத்தார் நண்பர் புடைசூழப் புத்தூரையடைந்தார். மங்கலமகளிர் நிறைகுடம் முதலிய ஏந்தி எதிர்கொண்டழைத்தனர். நம்பி யாரூரர் குதிரையை விட்டு இறங்கிப் போந்து திருமணப்பந்தலுள் மணத்தவிசில் அமர்ந்தார்.ஆலாலசுந்தரரைத் தடுத்தாட்கொள்வதாகத் திருக் கயிலாயத் தில் முன்பு உறுதி கூறிய சிவபெருமான் நம்பியாரூரரைத் தடுத்தாட் கொள்ள விரும்பி முதிய வேதியராய்த் திருமேனிகொண்டு தளர்ந்த நடையோடு தண்டூன்றித் திருமணப் பந்தருள் நுழைந்தார்.முதியராய்வந்த அந்தணர் அங்குள்ளவர்களைப் பார்த்து `வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்` என்றார். அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் `தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்` என்றனர். அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி `எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திரு மணத்தைச் செய்ய முயலுக` எனக் கூறினார். நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து `உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மை யானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறுக` என்றார்.முதியவர் அவையோரை நோக்கி `இந்நாவலூரன் எனக்கு வழிவழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு` எனக் கூறினார். அம் மொழிகேட்டுத் திடுக்கிட்டனர் சிலர்; திகைப்புற்றனர் சிலர்; இவர் யார் என இகழ்ந்து நோக்கினர் சிலர். நம்பியாரூரரும் `இம் மறையோன் மொழி நன்று நன்று` என்று இகழ்ச்சி தோன்ற நகைத்தார்.அதுகண்ட கிழவர் அவர் அருகே சென்று `அக்காலத்தில் உனது பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன?` எனக் கேட்டார்.நம்பியாரூரர் `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல்என்பது இவ்வுலகில் எங்கும் கேட்டதில்லை. இன்றுதான் புதிதாக நீர் சொல்லக்கேட்டேன், மறையோனாகிய நீ பித்தனோ?` என்றார். அதுகேட்ட முதியவர் `யான் பித்தனாயினும் ஆக; பேயனாயினும் ஆக, நீ எத்தனைமுறை இகழ்ந்துரைத்தாலும் நான் நாணமுறுவேன் அல்லேன். நீ என்னைச் சிறிதும் அறிந்து கொள்ளவில்லை என்பதையே நின்மொழிகள் புலப்படுத்துகின்றன. வித்தகம் பேசவேண்டாம். எனக்குப் பணி செய்ய வேண்டும்` என்றார். அதுகேட்ட நம்பிகள் ஆளோலை உண்டு என்று கூறி இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்` என்றார்.`நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை இவ் அவையோர்முன்னிலையில்காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்` என்றார் அந்தணர். அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து அவ்வேதியர்கையிலுள்ள ஓலையைப் பறிக்கச் சென்றார். அந்நிலையில் அம்முதியவர் விரைந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து நம்பியாரூரரும் ஓடினார். மாலும் அயனும் தொடர ஒண்ணாத அவரைவலிந்து பின்தொடர்ந்த ஆரூரர் அம் முதியவர் கையிலுள்ள ஓலையைப்பறித்து `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல்என்ன முறை` என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.ஓலையைப் பறிகொடுத்த முதியவர் `இது முறையோ முறையோ` வெனக் கூவிஅழுதரற்றினார். அதனைக்கேட்ட அங்குள்ளவர்கள் அவ்விருவரையும் விலக்கினர். முதியவரை நோக்கி `உலகில் இதுவரை இல்லாத இவ்வழக்கைக் கொண்டுவந்து நிற்கும் முதியவரே! நீர் வாழும் ஊர் எது` என்று வினவினர். அதுகேட்ட முனிவர் `நான் வாழும் ஊர் நெடுந்தொலைவிலுள்ள தன்று; மிகவும் அண்மையிலுள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பி யாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்` என்றார். அம் மொழிகேட்ட நம்பியாரூரர் இம் முதியவர் வழக்காடுவதில் பழக்கப்பட்டவர் போலும் என்று தம்முள் எண்ணி அம்முதியவரை நோக்கி `நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்` என்றார்.முதியவர் `நீ திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமைஎன்பதை உறுதிப்படுத்துவேன்` என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார். அவரைப்பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார். இவ்வழக்கு என்னாகுமோ எனக் கலங்கிய நிலையில் சுற்றத்தாரும் உடன் சென்றனர்.திருவெண்ணெய்நல்லூர் அவையில்:திருவெண்ணெய் நல்லூரை அடைந்த முதியவர், அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் சென்றார். அவையத்தாரை நோக்கித் `திருநாவலூரனாகிய இவன் என் அடியான். என் அடிமை ஓலையை வலிந்து பிடுங்கிக்கிழித் தெறிந்துவிட்டு உங்கள் முன் வந்துள்ளான். இதுவே என் வழக்காகும்` என்று கூறினார். அது கேட்ட அவையத்தார் `ஐயா! அந்தணர் மற்ற வர்க்கு அடிமையாதல் இவ்வுலகில் இதுவரை இல்லையே` என்றனர். இது பொருந்தாவழக்கு என்றும் தெரிவித்தனர். அம் முதியவர் அவர்களைநோக்கி `இவ்வழக்கு எவ்வாறு பொருத்தமற்றதாகும்? இவன் கிழித்த ஓலை அவன் பாட்டன் எழுதிக்கொடுத்ததாகும்` என்று கூறினார்.அதைக்கேட்ட அவையோர் ஆரூரரை நோக்கி `நும் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலையை வலியவாங்கிக் கிழித் தெறிவது உனக்கு வெற்றிதரும் செயலோ? இம்மறையவர், தம் வழக்கைப் பொருத்தமாக எடுத்துக் கூறினார்.உம்முடைய கருத்து யாது` என்று கேட்டார்கள்.நாவலூரர் அவையோரைப்பார்த்துப் `பெரியோர்களே நான் ஆதிசைவ அந்தணன் என்பதை நீங்கள் அறிவீர்கள் முதியோராகிய இவ் அந்தணர் உலக வழக்குக்கு மாறாக என்னை அடிமை கொண்ட தாகச் சாதிப்பது மனத்தால் உணர்தற்கெட்டாத மாயையாக உள்ளது. இதைக் குறித்துத் தெளிந்து உணர என்னால இயலவில்லை எனக் கூறினார். அதைக்கேட்ட அவையத்தார் அம்மறையவரை நோக்கி `நம்பியாரூரரை அடிமைஎனக் கூறும் இவ்வழக்கிற்கு ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றனுள் ஒன்றைக்கொண்டு உறுதிப் படுத்தல் வேண்டும்` என்று கூறினர்.முதியவர் `நாவலூரன் சினம் மிகுதியால் என் கையிலிருந்து பறித்துக்கிழித்த அடிமைச் சீட்டு படியோலையாகும். அதன் மூலஓலையை அவையத்தார்முன் காட்டுதற்கென்றே போற்றிவைத் துள்ளேன். இவன் முன்போல் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்வீரேயாயின் அவ்வோலையைக் காட்டுவேன்` என்றார். அவையத்தாரும் அதற்கு உறுதியளித்தனர். முதியவர் மூல ஓலை யாகிய ஆவணத்தை அவையோரிடம் கொடுத்தார். கரணத்தான் ஓலையைப் படிக்கத் தொடங்கினான்.``திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் எழுதியது. வெண்ணெய்நல்லூரில் வாழும் முனிவர்பெருமானாகிய பித்தனுக்கு யானும் என் குடும்பத்து வழிவழியாக வரும் மரபினரும் அடித்தொண்டு செய்வதற்கு இதுவே ஆவண ஓலையாகும். உளம் ஒத்த நிலையில் இதனை எழுதிக்கொடுத்தேன். இதற்கு இவை என் எழுத்து`` இவ்வாறு எழுதப்பட்ட ஓலை வாசகத்தைச் சபையோர் கேட்டனர். சாட்சிக் கையெழுத்து இட்டவர்களது கையெழுத்துக்களை யும் ஒப்ப நோக்கி இவை ஏற்றுக்கொள்ளத்தக்கன என ஒத்துக் கொண்டனர். பின் நம்பியாரூரரை அழைத்து `உன்னுடைய பாட்ட னாரின் கையெழுத்து இதுதானா` என்பதைத் தெளிவாகப் பார்த்தறிக எனப் பணித்தனர்.அப்போது அங்கு நின்ற கிழவர் அவையினரை நோக்கி `முன்னர் ஆவண ஓலையைக் கிழித்த இவனா இம் மூல ஓலையைப் பார்த்தற்குத் தகுதியுள்ளவன். இவனது பாட்டன் எழுதிக்கொடுத்த வேறு கைச்சாத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து நியாயம் கூறுங்கள்` என்றார்.அவ்வாறே அவையோர் ஒப்பிட்டுப் பார்த்துக் கையெழுத்துக் கள் ஒத்திருப்பதைக்கண்டு `இம் மறையோர் வழக்கை மறுப்பதற்கு இனி ஒரு காரணமும் இல்லை; இம் முனிவருக்கு நீர் தோற்றுவிட்டீர். அவருக்கு அடிமை செய்தலே உனது கடமையாகும்` என்று முடிவு கூறினர்.நம்பியாரூரரும் அவையோர் முடிவைஏற்று உடன்பாடு அறி வித்தார். அதன்பின் அவையினர் அவ்வந்தணரைநோக்கி `நும் முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராக ஓலையில் குறிப்பிடப் பெற்றுள்ளதே, இவ்வூரில் உமது வீட்டையும், வாழ்க்கைச் செல்வத்தை யும் எங்களுக்குக் காட்டுக` என்றனர். பொருவருவழக்கில் வென்ற புண்ணியமுதல்வராகிய மறையவர் `உங்களில்ஒருவரும் என்னை அறியீராயின் என்னுடன் வருக` என்று சொல்லி நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து மறைந்தார். பின் சென்றார் யாவரும் அவரைக்காணாது திகைத்துநின்றனர். உடன் சென்ற நம்பியாரூரர் `என்னை அடிமைகொண்ட மறையவர் கோயிலுள் புகுந்து மறைந்தது என்கொலோ` என்று வியப் புற்று அவரைத் தொடர்ந்து சென்று கதறி அழைத்தார்.அர்ச்சனை பாட்டேயாகும்:மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய். இவ் வுலகியல் வாழ்வுஉன்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட்கொண்டோம்` என்று உண்மை உணர்த்தி யருளினார்.நாவலூரர் பெருமகிழ்ச்சியடைந்து தாய்ப் பசுவின் கனைப் பினைக் கேட்டுக் கதறும் கன்றினைப் போல அன்பினால் கதறி, மெய்மயிர் சிலிர்க்கக் கைகளைத் தலைமேல் குவித்து இறைஞ்சினார். மறையவனாய் வந்து என்னை வலிய ஆட்கொண்டதும் அருட் செயலோவென்று நெஞ்சம் நெக்குருகிப் போற்றினார். அந்நிலையில் பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக` எனப் பணித்தருளினார்.அவ் அருளுரையைச் செவிமடுத்த வன்றொண்டர் `என்னை வழக்கினால் வெல்ல வேதியனாய் வந்த கோதிலா அமுதே! நாயேன் நினது திருவருட் பண்பாகிய பெருங்கடலுள் எதனைத் தெரிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்` என்று கூறி உளங்கசிந்து நின்றார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால்என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை ஆண்டருளிய வள்ளலாரின் பெருங்கருணைத் திறத்தைப் ``பித்தா பிறைசூடீ``என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடி யருளினார். இத் திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த `இறைவன் இவ்வுலகில் இன்னும் இவ்வாறே நம் பொருள் சேர் புகழைப் பாடிப் பரவுக` என்று கூறி மறைந்தருளினார்.சிவபிரான் வன்றொண்டரைத் தடுத்தாட் கொண்டதால் புத்தூரில் நிகழவிருந்த திருமணம் நின்றது. சடங்கவி சிவாசாரி யருடைய மகளாரும், நம்பியாரூரரையே மனத்தில் கொண்டு அவரையே நினைந்து சிவலோகத்தை எளிதாய் அடையும் வகையை யும் பெற்றுக்கொண்டார்.இவ்வாறு நம்பியாரூரர் தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுறை இறைவரை இறைஞ்சித் தம்முடைய ஊராகிய திரு நாவலூரை அடைந்தார்.அங்குக் கோயில் கொண்டருளிய பெரு மானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற்றினார்.
        (ராசாதுரியன்)

Wednesday, 26 September 2012

இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்" உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச்சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது.அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.

ஆலயத்தின் சிறப்பு;

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன்வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்திமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீகொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளாதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்காதொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலேசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.